தியேட்டர்களில் இருந்து தூக்கப்படும் 'மாஸ்டர்' : விஜய் அதிருப்தி






விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த 'மாஸ்டர்' படம் இந்த மாதம் 13ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. படம் வெளியான 16 நாட்களில் நேற்று ஓடிடி தளத்திலும் வெளியானது.

இரண்டு வாரங்களைக் கடந்த பின்னும் தியேட்டர்களுக்கு இப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் இவ்வளவு சீக்கிரமாக படத்தை ஓடிடி தளத்திற்குக் கொடுத்ததற்கு தியேட்டர்காரர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தார்கள்.

படத்திற்காகப் பேசப்பட்ட பங்கு சதவீதத்தை தங்களுக்கு முதல் வாரத்திலிருந்தே உயர்த்தித் தர வேண்டும் என தியேட்டர்காரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தையில் ஒரு சுமூக உடன்பாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

எனவே, இன்றும், நாளையும் தியேட்டர்களுக்கு ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்கள் வருவார்கள் என்பதாலும், மூன்று வாரத்தை முழுமையாக முடிக்க வேண்டும் என்பதாலும் பிப்ரவரி 2ம் தேதியுடன் தியேட்டர்களில் இப்படத்தைத் திரையிடுவதை தியேட்டர்காரர்கள் நிறுத்தப் போகிறார்களாம்.

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு விஜய் படம் மூன்றே வாரங்களில் தியேட்டர்களை விட்டு தூக்கப்படுவது இதுவே முதல் முறை. இதனால், விஜய் சற்று அதிருப்தியில் இருப்பதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.


Comments

Popular posts from this blog

மதுரை மீனாட்சி அம்மன் கோயில், மதுரை மாமணியார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது

2006, a woman was found in her London apartment, as a skeleton, after 3 years of being dead - with the tv still running.

WORLD FIRST CAR HISTORY