கதறி அழுத நடிகை கீர்த்தி ஷெட்டி தெலுங்கு சினிமாவில் உப்பெண்னா என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகியவர் கீர்த்தி ஷெட்டி.இவருக்கென தெலுங்கில் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகர்களான நானியின் ஷியாம் சிங்கா ராய் மற்றும் நாக சைதன்யாவின் பங்கராஜு படங்களில் நடித்தார்.தற்போது மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.நானியின் ஷியாம் சிங்கா ராய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் களம் இறங்கினர்.இருப்பினும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு தமிழில் கிடைக்கவில்லை என்று தான் கூறவேண்டும்.இருந்தும் தமிழிலும் வெற்றிபெற வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்த நிலையில் தான் பாலா மற்றும் சூர்யா படத்தில் வாய்ப்பு கிடைத்தது.பாலா சூர்யாவை வைத்து இயக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.இதனை தொடர்ந்து மேலும் பட படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் கீர்த்தி ஷெட்டி.தற்போது இவர் தி வாரியார் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.ராம் போதினினி கதாநாயகனாக நடித்துள்ளார்.இப்படத்திற்கு டிஎஸ்பி இசையமைத்துள்ளார்.இப்படத்தின் சிம்பு பாடிய பாடலான புல்லட் எனும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.தற்போது விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை கீர்த்தி ஷெட்டி கலந்துகொண்டு பேட்டியளித்தார்.அப்பொழுது அவரை பேட்டி எடுப்பது போல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபல prankster சரித்திரன்,கீர்த்தி ஷெட்டி முன்னால் தனது துணை தொகுப்பாளருடன் சண்டையிட்டு அவரை அடித்து பிராங்க் செய்துள்ளார்.பின்னர் அதனை பிராங்க் என கீர்த்தியிடம் கூறிய பின்பு சிரித்துக்கொண்டே இருந்த நடிகை கீர்த்தி அழுதுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது